அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாவிட்டால் இந்த உலகில் இருந்திருக்க முடியாத அதிசயக் குழந்தை.

திருமதி. காயத்ரி சென்னை தாம்பரத்தில் வசித்து வருகிறார். 2018-ம் ஆண்டு நவமபர் மாதம் இவருக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில், பிரசவ காலத்திற்கு முன்பாகவே ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மற்ற குழந்தைகளைப் போல சாதாரண வாழ்க்கை நிலைக்கு திரும்ப, எக்கசக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குழந்தை நேத்ரனுக்கு இதயத்தில் ஒரு ஒட்டை இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. அடுத்து மீண்டும் மீண்டும் நுரையீரல் செயலிழப்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக கல்லீரலில் மிகவும் அரிதாக வரக்கூடிய புற்றுநோய் கட்டியும் இருப்பது தெரிய வந்தது.

அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் கன்சல்டண்ட் நியோநேடாலஜிஸ்ட் டாக்டர். லதா காஞ்சி பார்த்தசாரதி [Dr. Latha Kanchi Parthasarathy, Consultant Neonatologist, Apollo Children’s Hospitals] தனது மருத்துவக் குழுவினருடன் இணைந்து 8 மாத போராட்டத்தின் மூலம் குழந்தை நேத்ரனுக்கு புது வாழ்க்கைக்கான தொடக்கத்தை அளிப்பதில் முக்கிய வகித்திருக்கிறார். நேத்ரனுக்கு தொடர்ந்து பல்வேறு தொடர் மருத்துவ நடைமுறைகள் அளிக்கப்பட்டது. அவனது சிகிச்சை காலம் முழுவதும், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் கீமோதெரபி அளிக்கப்பட்டது. முதலில் நுரையீரல் செயல்பாடு நிலையாக இருக்க செய்வதுடன் மருத்துவ நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேநேரம், நேத்ரனுக்கு இதயத்தில் இருக்கும் ஒட்டைக்கும், முதல் செப்சிஸ் பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து இதர உடல் பிரச்னைகளுக்கும் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

நேத்ரன், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தான். வழக்கமான பிரசவ காலத்திற்கு முன்பாகவே 8 மாதங்களிலேயே பிறந்த்தால், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தான். அவனது நுரையீரல் வளர்ச்சியடையும் நிலையில் இருந்ததாலும், இதயத்தில் ஓட்டை இருந்ததாலும் வெண்டிலேட்டரில் வைக்க வேண்டியிருந்தது. அவனது நுரையீரல் மென்மையாக இருந்தது. மேலும் அடிக்கடி செயலிழந்தபடி இருந்தது. அதேநேரம் செப்சிஸ் தாக்குதலுக்கும் உள்ளானான். பின்னர் ஆண்ட்டிபயாட்டிக்ஸ் மூலம் அதன் பாதிப்பு குறைக்கப்பட்டது.. வழக்கமான அல்ட்ராசவுண்ட் நடைமுறை அவனுடைய கல்லீரலில் வழக்கத்திற்கு மாறான எடையுடன் இருப்பதை உணர்த்தியது. சிகிச்சையின் போது அது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தது. இதனால் தொடர்ந்து மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், பாதிப்பை உண்டாக்கக்கூடிய கட்டி அல்லது பெனின் வாஸ்குலர் மாஸ் [benign vascular mass]-க்கான வாய்ப்புகள் இருப்பதாக சிடி ஸ்கேன் காட்டியது. இவை பயாப்சிக்கு பின்பு ஹெபடாப்ளாஸ்டோமா [Hepatablastoma] ஆக அதாவது புற்றுநோயை உருவாக்கும் மிக அரிதான கட்டியாக மாறும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
’’இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் எதிராக போராட, நாங்கள் கீமோதெரபியை ஆரம்பித்தோம். அதாவது கல்லீரல் அறுவைச்சிகிச்சைக்கு முன்பாக அக்கட்டியை சுருங்க செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் கீமோதெரபியை தொடங்கினோம். துரதிர்ஷ்டவசமாக, நேத்ரன் பிறக்கும் போதே அவனது இதயத்தில் இருந்த ஓட்டை கூடுதல் சிக்கல்களை உருவாக்கியது. இதயத்திற்குள் நுழையும் இரத்தம், அந்த துளை வழியாக நுரையீரலில் அதிகமாகப் பாய்ந்து, ஆபத்தான அளவிற்கு அழுத்தத்தை அதிகரித்தது.

அதனால் நாங்கள் கீமோதெரபியை நிறுத்த சூழலுக்குத் தள்ளப்பட்டோம். மேலும் குழந்தைக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல்கள் எளிதில் பாதிப்படையும் வகையில் இருந்ததோடு, தொடர்ந்து செயலிழந்து வந்தது. இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு மீண்டும் செப்சிஸ் தாக்குதல் ஏற்பட்டது. இது குழந்தையின் உயிருக்கே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தள்ளியது’’ என்றார் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் கன்சல்டண்ட் நியோநேடாலஜிஸ்ட் டாக்டர். லதா காஞ்சி பார்த்தசாரதி.
மேலும் அவர் கூறுகையில், ‘’குழந்தை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து போராடினான். அதனால் நாங்களும் அவனுக்காக போராடினோம். அவனது இருதய அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரது கல்லீரலின் வலது மடலை, அதனுடன் இருந்த கட்டியுடன் அகற்றினோம். ஆனால் நேத்ரனுக்கு மீண்டும் மூன்றாவது செப்சிஸ் தாக்குதல் ஏற்பட்டது. ஆண்டிபயாடிக் மூலம் அது குணப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியான சிகிச்சைகள் குழந்தையின் நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளித்தன. சிகிச்சை தொடர்ந்து கொடுக்க கொடுக்க, அவனது மண்டை ஓடு ஒரு கூம்பு போல இணைய தொடங்கியது. தலையின் வடிவம் அசாதாரணமாக மாற அவனது முளைக்குள்ளே அழுத்தத்தை அதிகரித்தது. இதை குணப்படுத்த நாங்கள் இறுதியாக ஒரு க்ரானியல் அறுவை சிகிச்சை [cranial surgery] செய்தோம்.”
நேத்ரனின் கடைசி கீமோதெரபி ஜூலை மாதம் 4-ம் தேதி முடிவடைந்தது. அதற்கு பின்னர் குழந்தையிடம் நல்ல முன்னேற்றங்கள் தெரிகின்றன. தற்போது நேத்ரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டான்.

AD

Skip to toolbar