WORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in

WORLD CUP KABADDI 2019

மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள்.

ஜீலை 20 முதல் 28 வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 12 ஆண் வீரர்களும், 12 பெண் வீரர்களும், தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த அணிக்கு அர்ஜுனா விருது பெற்றவர்களும், முன்னாள் சர்வதேச வீரர்களான திரு ராஜரத்தினம் அவர்களும் திரு ராகேஷ் குமார் அவர்களும் பயிற்சி அளித்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மலேசியாவில் உள்ள மேல காவில் நடைபெறும் இப்போட்டியில் நம்முடைய வீரர்கள் வெற்றிக் கொடி நாட்டி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப் போவதாக உறுதி அளித்துள்ளார் என்.கே.எப். பொதுச் செயலாளர் எம்.வி.பிரசாத் பாபு அவர்கள்.

கடந்த 18 ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்தார் மதுரை ” தின வணிகம் ” அன்பு அவர்கள்.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று தாய்நாடு திரும்புவோம் என்று உற்சாகமாக தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து புறப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பினார்.

இன்று துவங்கும் உலக கபடி போட்டியில் கலந்து கொண்டு, நம்முடைய இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப் போகும், நம்முடைய வீரர்களை அனைவரும் வாழ்த்துவோம்.

Skip to toolbar