தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்வி மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்வி மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
கோவை. ஜூலை.12-

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்விமைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு மூன்றாம் கட்ட புத்தாக்க பயிற்சி,,
கோவை கே பி ஆர் கல்லூரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கழைகம் சார்பில் கோவை,தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட பயிற்சி மையங்களை சேர்ந்த ஒருங்கினைப்பாளர்கள் கலந்து கொண்ட புத்தாக்க பயிற்சி நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கே பி ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி,பதிவாளர் தியாகராஜன்,இனை இயக்குனர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய கே பி ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, தற்சமயம் தங்களது தொழில் நிறுவனங்களில் 22000 இளம்பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும்,அவர்களில் ஐம்பது சதவிகிதம் பெண்களையாவது கல்வி மேற்படிப்பு படிக்கவைக்க உள்ளதாகவும்,கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்த பெண்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் கடந்த ஆண்டு 40 பெண்கள் பல்கலைக்கழக அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்களது நிறுவனத்தில் பணிபுரிவதாகவும்,குறிப்பாக ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண்கள் அதிக அளவு இருப்பதால் அவர்களுடைய தாய்மொழியில் கல்வி கற்க உதவவேண்டும் என்றும் கூறினார்.விழாவில் பேசிய தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் தமிழகத்தில் கல்வி கற்க முடியாமல் இருப்பவர்களுக்கும், இடையில் நிறுத்தியவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி தருகிறது. மாணவர்களுக்கு எவ்வளவு எளிதில் புரிய வைக்க முடியுமோ அந்த அளவில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்கவும், தமிழகத்திலுள்ள கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் களுக்கு ஒவ்வொரு மண்டலம் வாரியாக இந்த புத்தாக்க பயிற்சி நடத்தி வருவதாகவும்,மூன்றாம் கட்டமாக கோவையில் இந்த பயிற்சி நடைபெற்று வருவதாகவும்,அடுத்த பயிற்சி மதுரையில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்,இந்த பயிற்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சம்பத்குமார், சரவணக்குமார்,வினோத்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Skip to toolbar