ஏதர் எனர்ஜி சென்னையில் விரிவடைகிறது : அதன் இரண்டாவது சந்தையில் ஏதர் 450 மற்றும் 340 ஐ அறிமுகப்படுத்துகிறது

தனது பொது சார்ஜிங் மையமான ஏதர் கிரிட்டை வெற்றிகரமாக அமைத்த பின்னர், ஏதர் எனர்ஜி அதிகாரப்பூர்வமாக அதன் ஏதர் 450 க்கான ப்ரீ ஆர்டர்களை(முன்பதிவுகள்) ஏற்கத் தொடங்கியுள்ளது. இது 2018 ஜூன் இல் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிறுவனமானது இரண்டாவது நகரமாக சென்னையுள் அறிமுகப்படுத்துகிறது ஏதர் இன் தலைசிறந்த ஸ்கூட்டரானது உரிமையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெரும் ஈர்ப்பை கண்டுள்ளது மற்றும் இரு சக்கர வாகனங்களின் சந்தையின் எதிர்பார்ப்பை மாற்றியுள்ளது

கடந்த வார இறுதியில், ஏதர் சென்னையில் அதனை பின்தொடர்பவர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கி அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன் 450 ஐ காட்சிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியானது நிறுவனம் கட்டமைத்துள்ள ஏதர் சமூகத்தை மையமாகக கொண்டுள்ளது மற்றும் ஐம்பது பெங்களூரு உரிமையாளர்கள் சென்னைக்கு வந்து தங்கள் உரிமையாளர் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர் இந்த வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, ஏதர் 450 ஏற்கனவே சென்னையில் நவம்பர் வரை விற்றுவிட்டது. நிறுவனம் இப்போது தனது இரண்டாவது லிமிடெட் பேட்ச் இன் விநியோகங்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.

ஏதர் 450 ரூபாய் 131683 மற்றும் ஏதர் 340 ரூபாய்.119091.என்ற சாலை (On Road) விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது இந்த விலையானது ஒழுங்குமுறைகளின்படி 2 ஹெல்மெட், FAME 2 மானியம் மற்றும் காப்பீடு, சாலை வரி, ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் போன்றவை அனைத்தும் இதில் உள்ளடங்கும் .
.ஏதர் தனது முதல் ஏதர் கிரிட் (சார்ஜிங் மையம்) மையத்தை சென்னையில் 2019 மே மாதம் நிறுவியதை அறிவித்தது. அதன் பின்னர் சென்னையில் பத்து வேகமான சார்ஜிங் மையங்களை நிறுவியுள்ளது இந்த சார்ஜிங் மையங்கள் ஃபோரம் விஜயா மால் போன்ற மால்கள், அட்வொர்க்ஸ் போன்ற அலுவலகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளது நகரத்தில் மின்சார வாகன மையமாக்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, ஏதர் எனர்ஜி 4சக்கர மற்றும் 2சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் ஏதர் சார்ஜிங் மையத்தில் டிசம்பர் 2019 வரை இலவச சார்ஜிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது மேலும் இவற்றை தொடர்ந்து 40-50 சார்ஜிங் மையங்களை நிறுவவுள்ளது
நுங்கம்பாக்கத்தின் வாலஸ் கார்டனில் ஏதர் ஸ்பேஸ், ஏதர் எக்ஸ்பீரியன்ஸ் மையாயத்தை திறப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூருவுக்குப் பிறகு இது இரண்டாவது எக்ஸ்பீரியன்ஸ் மையமாக இருக்கும். ஏதர் நாடு முழுவதும் பல மையங்களைத் திறக்கவுள்ளது .

செப்டம்பர் முதல் இந்த ஆண்டில் நடக்கும் அனைத்து டெலிவரிகளுக்கும் இலவச ஏதர் ஒன் சந்தாவை நிறுவனம் அறிவித்துள்ளது. ஏதர் ஒன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பொது மற்றும் வீட்டு சார்ஜிங் இலவச அணுகலை வழங்குகிறது அத்துடன் நுகர்பொருட்களை உள்ளடக்கிய வழக்கமான பராமரிப்பு; முறிவு உதவி(break assistance)மற்றும் வரம்பற்ற தரவு சேவைகள் ஆகியவை மதந்திரம் வெறும் ரூபாய் 700 + ஜிஎஸ்டி இல் வழங்குகிறது.
பெங்களூரு மற்றும் சென்னையில் விநியோகங்களை அதிகரிக்க நிறுவனம் தனது உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது. வாகனங்களுக்கான காத்திருப்பு காலமானது குறைந்துள்ளது, இது கடந்த மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரிகளை வழங்குவதற்கு உதவியது.

ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா அவர்கள் பேசுகையில் கூறியது :
“ பெங்களூருவில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏதர் பிறந்த சென்னையில் நுழைவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நகரத்தில் மின்சார வாகனங்கள் குறித்த நம்பமுடியாத அளவு உற்சாகமும் விழிப்புணர்வும் உள்ளது. சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்டுத்துவதற்கு முன்னரே எங்கள் முன் வெளியீட்டு நிகழ்வில் முதல் தொகுதி விநியோகங்களை விற்றுமுடிந்ததே இதற்கு சாட்சி மூன்று நுகர்வோரில் இருவர் ஒரு வாகனத்தை முன்கூட்டியே ஆர்டர் செய்தனர், சிலர் சோதனை சவாரி செய்வதற்கு முன்பே ஆர்டர் செய்தனர் எங்களுக்கு பெங்களூரை விட சென்னை ஒரு பெரிய சந்தையாக இருக்கும் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்.பெங்களூருக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் கடந்த ஆண்டை அளவீடு செய்துள்ளோம், மேலும் 450 இல் கூடுதல் அம்சங்களையும் மேம்பாடுகளையும் உருவாக்கி வருகிறோம். குத்தகை முறை (lease)போன்ற புதிய வடிவிலான உரிமை முறைகளை நாங்கள் பரிசோதித்து வருகிறோம், அதை சென்னையில் தொடங்குவதில் நங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ””.

தயாரிப்பு – ஏதர் 450 நகரின் சவாரி நிலைமைகளுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும், 75 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது (ஐடிசி சான்றிதழ் 107 கிமீ) மற்றும் ஸ்கூட்டர் வகையில் விரைவான (0-40 கிமீ / மணிநேரம்). எக்சிலரேஷனை 3.9 வினாடிகளில் கொண்டுள்ளது இந்த பிரிவில் முதல் முறையாக, ஏதர் 450 பார்க்கிங் உதவியுடன் வருகிறது, இது ரைடர்களை இறுக்கமான பார்க்கிங் இடங்களில் ரிவர்ஸ் செய்ய அனுமதிக்கிறது.
ஏதர் 450 இன் முக்கிய வேறுபாடு அதன் புத்திசாலித்தனமான அம்சங்கள், தடையற்ற சார்ஜிங் மற்றும் உரிமையாளர் அனுபவம்.ஏதர் 450 இல் 7” அங்குல தொடுதிரை டாஷ்போர்டு உள்ளது, இதில் உள்ள ஆண்போர்டு நெவிகேஷான் மாற்று வழிகள் மற்றும் சேமிக்கப்பட்ட இடங்களின் விருப்பங்களில் உங்களை பயணம் செய்ய அனுமதிக்கிறது.இது ஏதர் செயலி பயன்பாட்டுடன் வருகிறது, இதில் உள்ள புஷ் நெவிகேஷான் அம்சம் மூலம் வாகனத்துடன் தொலைபேசியை இணைத்து தொலைபேசியிலிருந்து வாகன டாஷ்போர்டில் நம் செல்லும் வழிகளை பார்ப்பதற்கு அனுமதிக்கிறது, வாகனத்தின் உடல்நலம் மற்றும் சார்ஜிங் நிலைய கண்காணிக்கும் ரிமோட் அணுகுதலை வழங்குகிறது
ஏதர் 450 ஒரு வீட்டு சார்ஜிங் மையத்துடன் வருகிறது, இது நிறுவனத்தால் உரிமையாளர்களின் வீடு அல்லது பணியிடத்தில் நிறுவப்படும். நிறுவனம் வாகனத்தை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆறு முக்கிய OTA புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுப்பிப்புகள் வாகனம் மற்றும் செயலி பயன்பாட்டில் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களை ஏற்படுத்தியுள்ளன புதிய சவாரி முறைகள், வரம்பு மற்றும் நெவிகேஷான் மேம்பாடுகள் முதல் ஏதர் செயலியில் சவாரியின் புள்ளிவிவரங்கள் வரை உள்ளன,

V.BALAMURUGAN

Skip to toolbar