ரயில்களில் கடத்தி வரப்பட்ட, 4.16 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது,(Arjuna TV)

சென்னை:”ரயில்களில் கடத்தி வரப்பட்ட, 4.16 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது,” என, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை, ஐ.ஜி., பிரேந்திரகுமார் கூறினார்
.ரயில்வே பாதுகாப்பு படையின், 64வது வார விழா, சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்த, ரயில்வே பாதுகாப்பு படை, ஐ.ஜி., பிரேந்திரகுமார், பாதுகாப்பு படையில் சிறப்பாக பணிபுரிந்த, 78 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.ஏற்பாடுஅவர் அளித்த பேட்டி:ரயில்களில், இரவு நேரத்தில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெட்டிகளில், கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி – ஜூன் வரை, பெற்றோரை பிரிந்து, நிலையங்களில் சுற்றிதிரிந்த, 1,040 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.ரயில்களில், போதை பொருட்கள் கடத்தல் தொடர்பாக, 165 வழக்குகளில், 4.16 கோடி ரூபாய் மதிப்புள்ள, கஞ்சா, குட்கா, ஜர்தா, பான்மசாலா, மாவா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன.ரயில் டிக்கெட்டுகளை, கூடுதல் விலைக்கு விற்ற, 116 பேர் கைது செய்யப்பட்டு, 84 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒப்படைப்பு
ரயிலில், பயணியர் தவற விட்டு சென்ற, 1,127 உடமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.படியில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்வதை, பயணியர் தவிர்க்க வேண்டும். மீறுவோர், ரயில்வே பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டு, அபராதம் செலுத்த நேரிடும்.இவ்வாறு, பிரேந்திரகுமார் கூறினார்.ரயில்வே பாதுகாப்பு படை, டி.ஐ.ஜி., அருள்ஜோதி, சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு கமிஷனர், சந்தோஷ் என்.சந்திரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.

V.#BALAMURUGAN

Skip to toolbar