கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் புகுந்தவர் 10 பேர் கைது (Arjuna TV)

ஊட்டி: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு உள்ளே சென்றது. பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இவ்வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஆஜராகினர். பின்னர் நீதிபதி வடமலை வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

(V.BALAMURUGAN)

Leave a Reply

You may have missed

Skip to toolbar