4 மீனவர்களும் கரை திரும்பவில்லை (Arjuna TV)

மணமேல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் இருந்து கடந்த 4ம் தேதி நாட்டுப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மறுநாள் கரைதிரும்பும் போது ஒரே படகில் சென்ற ஸ்டீபன் (48), அந்தோணி (42), வினோஷ் (46), சிந்தாஸ் (43), ஆகிய 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை. அவர்களை படகுகளில் சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜயம்பட்டினம் மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்த ஸ்டீபன், அந்தோணி ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அவர்கள் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாயமான வினோஷ், சிந்தாஸ் ஆகியோர் கதி என்ன என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

(V.BALAMURUGAN )

Leave a Reply

You may have missed

Skip to toolbar