ஸ்ரீ செல்வவிநாயகர் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா

கோவை இராமநாதபுரம் ரூபா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா
விமரிசையாக நடைபெற்றது,

கோவை, ஜூலை8-
கோவை சுங்கம் சிந்தாமணி பின்புறம் உள்ள ரூபா நகரில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ கருப்பராயன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோவை ரூபா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில் 35 வருடங்களாக அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 8.7.2019 அன்று சிறப்புடன் நடைபெற்றது. 07.07.2019 அன்று கோ பூஜையுடன் துவங்கி காலை 10மணிக்கு 80 அடி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேல் முருகன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக வந்தடைந்தன அன்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது இரவு 8 மணிக்கு முதற்கால பூர்ணாஹுதி தீபாராதனையுடன் துவங்கியது.பிறகு 08.07.2019 அன்று காலை 6.30 இரண்டாம் கால யாக பூஜைகள் உடன் நாடி சந்தானம் ஸ்பரிசாஹுதி , திரவிய ஹூதி, மகா பூர்ணாஹுதி தீபாராதனையுடன், 9 .45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றறது. பின்பு அன்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தினை கோவை திருமெய்ஞானம் ஸ்ரீ ஸ்ரீ டி.வி.சுப்ரமணிய சிவாச்சாரியார், கும்பகோணம் கடிச்சம்பாடி வேதசிவாகம ப்ரவீனர் சிவஸ்ரீ கா.அய்யாசாமி ஈசான சிவாச்சாரியார், மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 2வது ஸ்தானிகர் ஸ்ரீஸ்ரீ சதீஷ்குமார் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர்.கோவை ஆர்ய வைத்திய பார்மஸி டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சாக்தஸ்ரீ ஸ்ரீ வராஹி மணிகண்ட சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
விழாகுழுவினர் தலைவர் மனோகரன் செயலாளர் சுரேஷ்குமார் பொருளாளர் சுப்பிரமணியம் துணைத்தலைவர் முனியாண்டி துணைச்செயலாளர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ரூபா நகர், காமாட்சி அம்மன் கோவில் உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். விழாவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Skip to toolbar