பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் வெற்றி பெற ஐந்து வழிகள்

பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் வெற்றி பெற ஐந்து வழிகள்

SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழாவானது 06.07.19 அன்று கல்லூரிவளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ.கணேசன் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக புதுமை விரும்பி மற்றும் வெற்றியின் வெளிச்சம் என்று சொல்லப்படும் ஆக்சஞ்சர் மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு சாத்தப்பன் நாராயண் அவர்கள் கலந்துகொண்டு அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 13 மாணவர்களுக்கு பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் பட்டங்களை வழங்கி கெளரவித்தார். மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற 829 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
இவர் தனது பட்டமளிப்பு விழா உரையில் நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றில் முதலாவதாக நமக்கு மிகவும் பிடித்தமான துறையை தேர்வு செய்வது அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு என்று என்ன திறமை உள்ளது என்பதை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு துறையை தேர்வு செய்து அதில் இன்முகத்துடன் ஈடுபட வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல, எந்த வேலையை செய்தாலும், ஒரு அன்புடன், பற்றுடன் ,ஈடுபாட்டுடன் ,அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்; இல்லையேல் அந்த வேலையை செய்யக்கூடாது என்று கூறினார். அடுத்த வழிமுறையாக நம் பணியாற்றும் தொழில்நுட்ப இடங்களில் தொழில்நுட்ப தொலையறிவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மாற்றியமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து நம்மிடம் வரும் உரிமையாளர்களின்(பயனர்களின்) பார்வையறிவை நாம் தெரிந்து கொண்டு, அதை சரி செய்து அவர்களுக்கு ஏற்றாற்போல இயங்க வேண்டும்.அவர்களுக்கான தேவையை அறிந்து நிறைய புதிய கண்டுபிடிப்புகளை கண்டு உணர வேண்டும் .புதுப்பித்தல் என்பது புதிய கண்டுபிடிப்பு கிடையாது. எந்தெந்த வழிமுறைகளில் உரிமையாளர்களை (பயனர்களை) கவரலாம்; அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வழிமுறையே புதுப்பித்தல் என்பதாகும். மேலும் அவர் கூறிய நான்காவது வழிமுறை என்பது எந்த வேலையை எடுத்து செய்தாலும் அல்லது செய்யச் சொன்னாலும். அது நம்மால் முடியாது என்று நினைக்காமல்,அந்த வேலையில் உள்ள கடினத்தை சவாலாக எடுத்துக்கொண்டு, நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற வகையில் செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார். வாழ்க்கையில் வெற்றி பெற கடைசி வழிமுறையாக, நம்மிடம் உள்ள திறமையை மிகைப்படுத்தி சொல்லும் போதும்,செயலாற்றும் போதும் நமக்கு மிகப்பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறினார்.
இந்த இனிய நாளில், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் முனைவர். சந்தீப் சஞ்செட்டி அவர்கள் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குனரும், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைத் துணை வேந்தருமான முனைவர். தி.பொ.கணேசன் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார். மேலும்,கல்லூரியின் முதல்வர் முனைவர். பா. சிதம்பரராஜன் அவர்கள் கடந்த கல்வியாண்டில் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கிய பட்டமளிப்பு நாள் அறிக்கையை வாசித்தார்.

AD

Skip to toolbar